தூங்கா மனங்கள்!
சிறு தொடர்-பகுதி1
தூங்கா மனம்1- சரளா
“நல்லா படிக்கணும், நிறைய மார்க் வாங்கணும், கவர்மெண்ட் வேலைக்கு போயிடணும்”
இது தான் எனக்கு கொடுத்த அசைன்மெண்ட்.
அதை நான் கரெக்டாவே செஞ்சிட்டேன்.
ஒரு சராசரியான குடும்பத்துல பொண்ணுங்க படிச்சு முடிச்சா என்ன செய்வாங்களோ அதையேதான்எனக்கும் செஞ்சாங்க…அதாங்க…கல்யாணம்…
இங்க யாருக்குமே என்னோட உணர்வுகள பத்தி கவலையே இல்ல….
அப்பா அம்மாவுக்கு அவங்க கடமைய நிறைவேத்திடனும்னு அவசரம்…
இங்க நிறைய பெத்தவங்க தம் பிள்ளைங்களுக்கு கல்யாணம் செய்யறத அவங்களோட கடமையாநினைக்கறாங்க…
பிள்ளைங்க சந்தோஷமா இருக்காங்களானு தெரிஞ்சுக்கறதெல்லாம் கடமைக்கு அப்புறமா வர ஒருஆப்ஷன்தான்…
படிப்புல ஆரம்பிச்சு கல்யாணம் வரைக்கும் அவங்க சொல்றததான் கேக்க வேண்டியிருக்கு…
அதுவும் பெண் பிள்ளைகள்னா வேறு வழியே இல்ல…
அடிப்படையான விஷயங்களுக்கும் போராடணும்…
சைக்கிள் வேணும்…. பொம்பளபிள்ளைக்கு எதுக்கு சைக்கிள்? தடை…
சுடிதார் வேணும்… அதெல்லாம் நமக்கு சரிப்படாது….வேணாம்…
எனக்கு இன்ஜினியருக்கு படிக்கணும்… அவ்ளோ எல்லாம் செலவு பண்ண முடியாது… கல்யாணத்துக்குவேற செலவு பண்ணனும்… இதப் படிச்சாலே போதும், வேல கிடைச்சிடும்.
என்னோட எல்லா ஆசைகளும் மறுக்கப்பட்டு அவர்களுக்கு எது வசதியோ அதுவே அளிக்கப் பட்டது…
சரி, கல்யாணமாவது ஒரு மாற்றத்த குடுக்கும்னு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இல்லனாலும் குறைந்தபட்சபுரிதலாவது இருக்கும்னு இங்க வந்தா என்னப் பத்தி யோசிக்க எனக்கே நேரம் இல்ல…
எனக்கு என்ன பிடிக்கும், யார பிடிக்கும், என்ன வேலை பிடிக்கும், என்னல்லாம் எனக்கு பிடிக்காதுன்னுயாருக்கும் தெரியாது…எனக்கே அதெல்லாம் மறந்து போயிடும் போல இருக்கு..
என்னோட மனநில என்ன?
யாரும் தெரிஞ்சுக்கவோ புரிஞ்சுக்கவோ முயற்சிக்கூட செய்ய தயாரில்ல…
எல்லார்க்கும் அவங்கவுங்க பிரச்சனை…
பொண்ணுங்க பிரச்சனைகள பொண்ணுங்களே புரிஞ்சுக்க தயாரில்லாத சமூகத்துல வாழுறது ரொம்பஅவஸ்தையாயிருக்கு…
ஒவ்வொரு உயிரும் தனி…அதுக்கான உணர்வுகளும் தனி….
இது இங்க யாருக்குமே புரியல்ல..
எல்லாத்துக்கும் ஒரு கம்பேரிசன்…நீ என்ன அதிசயமா? என்ற கேள்வி தர வலிகள்லாம் ரொம்ப ரணம்…
பொண்ணுங்களோட வாழ்க்கை சுழற்சியில பூப்படைதல்ல ஆரம்பிச்சு
திருமண உறவுல புகுந்து
தாய்மை அடைஞ்சு அம்மாவா பிள்ளைகள வளர்க்குறதல இருக்கற சவால்கள சந்திக்கும் போதும்
வயது வந்த பிள்ளைகளுக்கு அம்மாவ மாறும் போதும்
ஐம்பதின் பின்பகுதியில் சந்திக்கிற மெனோபாஸ் பிரச்சனைகளின் போதும் நாம சந்திக்கிற உடல்ரீதீயான மாற்றங்களும் மன ரீதியான மாற்றங்களையும்
அதனால வர பிரச்சனைகளையும் எப்போ ஆம்பளைங்க புரிஞ்சுக்க ஆரம்பிக்கிறாங்களோ அப்பதான்இதுக்கெல்லாம் ஒரு விடிவுகாலம் கிடைக்கும்…
அதுவரைக்கும் இப்படியே புலம்ப வேண்டியதுதான்…
ஆனா சில நேரத்துல பொண்ணுங்களே இத புரிஞ்சுக்காத போது இதெல்லாம் ஆம்பளைங்கபுரிஞ்சுக்கணும்னு எதிர்பார்கறது கொஞ்சம் பேராசை தான் இல்லையா?
என்ன நானே நொந்து கொண்டு படுக்கையில் கிடந்தேன்…
என்ன வாழ்க்கை இது?
எதுக்கு தினம் விடியுது?
புதுசா விடிஞ்சா மட்டும் என்ன மாறப் போகுது?
காலையில எழுந்து எல்லோருக்கும் சமைச்சு வைச்சுட்டு வேலைக்கு போகனும்..
வேலைக்கு போற இடத்துல மீடூ உட்பட எல்லா சவாலையும் சந்திச்சு ஜெயிக்க முயற்சி பண்ணனும்…
தண்ணி குடிக்க மறந்து சாப்பிட மறந்து அப்போதைக்கு இருக்கற வலியையும் மறந்து அன்னைக்குமுடிக்க வேண்டிய டாஸ்க் முடிச்சு ஆபிஸ விட்டு கிளம்பும் போது எதுக்குடா வேலைக்கு வரோம்னுதோணும்… ஆனா வந்தாகனுமே…
வீட்டுக்கு வந்தா அடுத்தடுத்த டாஸ்க் ரெடியா இருக்கும்…
பசங்க கார்த்தியும் இந்திராவும் வந்துட்டாங்களான்னு பாக்கறதிலிருந்து எல்லோருக்கும்
ராத்திரிக்கு என்ன உணவு சமைக்கணும்ற கேள்விக்கு வரைக்கும் பதில் தேடனும்…
அப்புறம் இரவு முடியும்… திரும்பவும் பகல் விடியும்…
இதேதான் தினம் தினம்…
சே! என்ன வாழ்க்கை இது?
சரளாவின் தூங்கா மனத்தின் எண்ண ஓட்டங்களே இவை…
இதுதாங்க சரளா!
தூங்காமனம்2 யாருன்னு அடுத்த வாரம் சொல்றேன்..
உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்…
நன்றி!
வணக்கம்
!



