தூங்காமனங்கள்!
பகுதி3
எப்ப பார்த்தாலும் படி, படின்ற குரல் தான் என்ன சுத்தி கேக்குது…
அந்தப் பையனப் பாரு…அவன் அவ்ளோ மார்க், இந்தப் பொண்ணு பாரு… இந்த பரிசு வாங்கிருக்கா…
அத்தை கேப்பாங்க….மாமா விசாரிச்சா என்ன சொல்றது?
நீ இப்படி இருந்தா எப்படி உருப்படறது?
நல்லாப் படிச்சு ஒரு நல்ல பெரிய கம்பெனிக்கு வேலைக்கு போகனும் இதுதாங்க எனக்கு கொடுத்த டாஸ்க்…
நான் என்ன பண்ணணும்னு நான் தானே முடிவு பண்ணணும்?
ஹாபின்னா என்னங்க? எனக்கு பிடிச்சத பிடிச்ச நேரத்துல செய்யறது தானே?
தோட்டத்த பாத்துக்கறது எல்லாம் ஹாபி கேட்டகிரிலதானே வரும்…
யாருக்கு எத பிடிக்குதோ அதத் தானே செய்ய முடியும்?
இந்த அப்பா காலையில என்ன எழுந்து தோட்டத்துக்கு என்ன தண்ணி ஊத்த சொல்லி ஒரே டார்ச்சர்…
எனக்கு வரைய பிடிச்சிருக்கு, வரையணும்னு சொன்னா நீ கிறுக்கனது போதும், போய் செடிக்கு தண்ணி ஊத்து இன்சல்ட் பண்றாரு…
ஆனா நான் என்ன பண்ணணும் மொத்த குடும்பமே சேர்ந்து உக்காந்து முடிவு பண்றாங்க…
இது என்ன நியாயம்?
நான் கேக்கறது எதுவுமே எனக்கு கிடைக்கறது இல்ல…
அவங்க எத குடுக்கறாங்களோ அத தான் நான் வாங்கிக்கணும்…
என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் பைக் வச்சுருக்காங்க… எனக்கும் ஆச இருக்காதா..
ஆனா பைக் கேட்டா இல்லன்ற பதில்தான் எப்பவும்…
எப்போ கேட்டாலும் ஒரே பதில்தான்.. நீ சம்பாதிச்சு வாங்கிக்கோ…என்கிட்ட காசில்ல..
காசில்லன்றதல்லாம் காரணமில்ல… மனசில்ல… அதான் நிஜமான காரணம்…
ஏதாவது கேட்டா நான் அந்த காலத்துலனு அப்பா ஆரம்பிச்சுடுவாரு….
நான் எங்க போகனும்? என்ன செய்யணும்? இதக் கூட நான் முடிவு செய்ய முடியல…
அட…. பிடிச்சத சாப்பிட கூட முடியலங்க…
இத சாப்பிடாத, அது உடம்புக்கு ஆவாது…
இத தான் சாப்பிடணும்…
இவன் கூட சேராத… அவன் கூட சேராத….
எப்ப பாத்தாலும் ஒரே இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தான்..
வீட்ல இருக்கறது ஏதோ ஜெயில்ல இருக்கற மாதிரியே இருக்குது…
எப்பவும் யாரோடவாவது கம்ப்பேர் பண்ணிகிட்டே இருக்காங்க…
அம்மாவுக்கு அவங்க ஆபிஸ்ல வேல செய்யறவங்க பிள்ளைகளோட கம்ப்பேர் பண்ணணும்…
அப்பாவுக்கு உறவுக்காரங்க, நண்பர்கள் பிள்ளைகளோட கம்ப்பேர் பண்ணணும்…
நான் யாரு? எனக்குன்னு தனித்துவமே இருக்கக் கூடாதா?
நான் எங்க போகனும்? யார்கூட சேரணும் எனக்கு புரியாதா?
இன்னமும் மூணு வயசுல அவங்க கைய புடிச்சுகிட்டு போன மாதிரியே இப்பவும் இருக்கணும்னு எதிர்ப்பார்த்தா அது சரியா?
எனக்கான ஸ்பேசே இவங்க தர மாட்டேங்கறாங்களே…
இப்ப தூங்கு….இப்ப தூங்காதே…சே… நிம்மதியா இந்த வீட்டுல தூங்ககூட முடியல்ல…
படிப்பு முடிஞ்சதும் இங்கிருந்து கிளம்பர வழியப் பாக்கணும்…
படிப்பு முடிய இன்னும் 6 மாசம் இருக்கு…
அதுக்குள்ள அவனப் போயி பாரு…இவன்கிட்ட சொல்லிருக்கேன், இவனப் பாருன்னு ஒரே டார்ச்சர்….
எதையும் யோசிக்கக் கூட விட மாட்டேங்கறாங்க…
பத்தாததுக்கு இந்த வீட்டுலேயே இருக்குற குட்டி பிசாசு கூட வேற கம்ப்பேர் பண்ணி திட்டு விழுது…
நைட் ப்ரெண்ட் பாத்துட்டு வரத்துக்கு கொஞ்சம் லேட் ஆனாலும் எங்க இருக்க, எப்ப வருவன்னு ஒரே நொய் நொய்னு பிடுங்கறாங்க…
ஏதாவது செலவுக்கு காசு கேட்டா ஏதோ நான் மொத்த சொத்தையும் விக்க கேக்குறா மாதிரி பாத்துட்டு
ஆயிரம் கேள்விக்கு பதில் சொன்னப்புறம் கேட்டதுல பாதி காசு தராரு அப்பா…
ஒரு அடல்ட் ஆன பையனுக்கு எத எப்படி செய்யணும்னு தெரியாதா?
இப்பவும் கிண்டர் கார்டன் பையன் மாதிரியே நடத்துராங்களே!
சே!என்ன வாழ்க்கை இது?
கார்த்தியின் தூங்கா மனத்தின் எண்ண ஓட்டங்களே இவை…
இதுதாங்க கார்த்தி, ராகவனின் மகன் !
தூங்காமனம் 4 யாருன்னு அடுத்த வாரம் சொல்றேன்..
உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்…
நன்றி!
வணக்கம்!



